குடியிருப்புகளை முற்றுகையிட்ட காட்டு யானைகள்
குடியிருப்புகளை முற்றுகையிட்ட காட்டு யானைகளால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
நீலகிரி
பந்தலூர்,
பந்தலூர் அருகே கொளப்பள்ளி டேன்டீ ரேஞ்ச் எண்.1, 2, பத்து லைன்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கொளப்பள்ளி டேன்டீ ரேஞ்ச் எண்.2 பகுதியில் தொழிலாளர் குடியிருப்புகளை 2 காட்டு யானைகள் முற்றுகையிட்டன. அங்கு அவை சுவர்கள், கதவுகளை தும்பிக்கையால் தட்டியது. இதனால் அச்சம் அடைந்த தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் வீடுகளுக்குள் முடங்கினர். பின்னர் அதிகாலையில் காட்டு யானைகள் அங்கிருந்து சென்றது. காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story