குடியிருப்புகளை முற்றுகையிட்ட காட்டு யானைகள்


குடியிருப்புகளை முற்றுகையிட்ட காட்டு யானைகள்
x
தினத்தந்தி 13 Dec 2022 12:15 AM IST (Updated: 13 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

குடியிருப்புகளை முற்றுகையிட்ட காட்டு யானைகளால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி

பந்தலூர்,

பந்தலூர் அருகே சேரம்பாடி டேன்டீ ரேஞ்ச் எண்.1,2,3,4 பகுதிகளில் காட்டு யானைகள் புகுந்து வருகின்றன. மேலும் குடியிருப்புகளை தாக்குவதோடு, தொழிலாளர்கள், பொதுமக்களை துரத்தி வருகின்றன. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு டேன்டீ தொழிலாளர்கள் குடியிருப்புகளை காட்டு யானைகள் முற்றுகையிட்டன. இதனால் தொழிலாளர்கள் வீடுகளுக்குள் முடங்கினர். மேலும் ரேஞ்ச் எண்.3-ல் தோட்ட பகுதியில் யானைகள் புகுந்ததால், அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்தனர். இதை அறிந்த சேரம்பாடி வனச்சரகர் அய்யனார் உத்தரவின்படி, வனவர் ஆனந்த் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று காட்டு யானைகளை விரட்டினர்.


Next Story