குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் முகாமிட்ட காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு-பொதுமக்கள் நிம்மதி


குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில்  முகாமிட்ட காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு-பொதுமக்கள் நிம்மதி
x
தினத்தந்தி 21 Jan 2023 12:15 AM IST (Updated: 21 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் முகாமிட்ட காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

நீலகிரி

குன்னூர்

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் முகாமிட்ட காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

காட்டு யானைகள் முகாம்

குன்னூர் -மேட்டுப்பாளையம் சாலையில் பலாப்பழ சீசன் காலங்கள் மட்டுமின்றி வறட்சி காலங்களிலும் காட்டு யானைகள் உலா வருவது வழக்கம். இந்த யானைகள் குன்னூர் -மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள பர்லியார், கே.என்.ஆர்.நகர், மரப்பாலம் ஆகிய பகுதிகளிலுள்ள குடியிருப்புகளில் புகுந்து வாழை மரங்கள் நாசம் செய்து வந்தது. இந்த நிலையில் சமவெளி பகுதிகளிலிருந்து குட்டியுடன் 9 காட்டுயானைகள் குன்னூரில் கடந்த 40 நாட்களாக முகாமிட்டது. பகல் நேரங்களில் தேயிலை தோட்டங்களிலும், இரவில் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பிலும் முகாமிட்டிருந்தன.

வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

இந்த யானைகளை விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். போதிய ஆட்கள் இல்லாததால் யானைகளை விரட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து பழங்குடியின மக்கள் தங்களது குடியிருப்பு பகுதியில் காட்டு யானைகள் வராமல் தடுக்க வனத்துறையினருடன் 20-க்கும் மேற்பட்ட பழங்குடியினர் இணைந்து யானைகளை விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர் இந்நிலையில் நேற்று காட்டுயானை கூட்டத்தை பக்காசூரன்மலை பகுதியில் இருந்து ரண்ணிமேடு ரெயில் நிலையம் வழியாக அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டபட்டது. இதனால் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் குடியிருப்பு வாசிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.


Next Story