தேயிலை தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானைகள்


தேயிலை தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானைகள்
x
தினத்தந்தி 19 May 2023 5:15 AM IST (Updated: 19 May 2023 5:15 AM IST)
t-max-icont-min-icon

தேயிலை தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானைகளால் தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

நீலகிரி

பந்தலூர்

பந்தலூர் அருகே கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச் எண் 1 மற்றும் 2, காவயல், பாலவாடி லைன்ஸ், பத்து லைன்ஸ் பகுதிகளில் தோட்ட தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள். வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் இந்த குடியிருப்புகளுக்கு புகுந்து வருகின்றன. அப்போது பொதுமக்களை துரத்தி வருகிறது. இந்தநிலையில் நேற்று காவயல் பகுதியில் குட்டிகளுடன் காட்டு யானைகள் முகாமிட்டன. பின்னர் டேன்டீ தேயிலை தோட்டத்திற்குள் புகுந்தது. இதனால் தோட்டத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த தொழிலாளர்கள் அச்சத்தில் ஓட்டம் பிடித்தனர். தொடர்ந்து தேயிலை தோட்ட எல்லையையொட்டி உள்ள வனப்பகுதியில் முகாமிட்டு உள்ளதால், இரவு நேரங்களில் ஊருக்குள் நுழைய வாய்ப்பு உள்ளது. இதனால் தொழிலாளர்கள் பீதி அடைந்து உள்ளனர். இதேபோல் அய்யன்கொல்லியில் இருந்து கொளப்பள்ளி செல்லும் சாலையோரத்தில் உள்ள தேயிலை தோட்டத்திற்குள் குட்டியுடன் காட்டு யானைகள் புகுந்தன. அங்கிருந்த தோட்ட தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் அங்கிருந்து யானைகள் அய்யன்கொல்லி-கொளப்பள்ளி சாலையில் முகாமிட்டு வாகனங்களை வழிமறித்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த சேரம்பாடி வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.


Next Story