மீண்டும் அரசு பள்ளிக்குள் நுழைந்த காட்டுயானைகள்
மீண்டும் அரசு பள்ளிக்குள் நுழைந்த காட்டுயானைகள்
நீலகிரி
பந்தலூர்
பந்தலூர் அருகே அய்யன்கொல்லியில் அரசு உண்டு உறைவிட பள்ளி உள்ளது. இங்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு காட்டுயானைகள் புகுந்து, வளாகத்தில் உள்ள பலா மரத்தில் இருந்த பழங்களை பறித்து தின்றது. இந்த நிலையில் மீண்டும் 2 காட்டுயானைகள், அந்த பள்ளிக்குள் புகுந்தன. தொடர்ந்து பலா மரங்களில் பழுத்து குலுங்கிய பழங்களை பறித்து தின்றுவிட்டு சென்றன. இதன் காரணமாக மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர் பீதி அடைந்து உள்ளனர். மேலும் பள்ளி வளாகத்துக்குள் நுழையும் காட்டுயானைகளை தடுக்கவும், அங்குள்ள பலா மரத்தை அகற்றவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story