காட்டு யானைகளை விரட்ட வேண்டும்


காட்டு யானைகளை விரட்ட வேண்டும்
x
தினத்தந்தி 7 Jan 2023 12:15 AM IST (Updated: 7 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குன்னூர் அருகே முகாமிட்ட காட்டு யானைகளை விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

நீலகிரி

குன்னூர்,

குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதை மற்றும் தேயிலை தோட்டங்களில் கடந்த 22 நாட்களாக குட்டியுடன் 9 யானைகள் முகாமிட்டு உள்ளன. குறிப்பாக சமவெளி பகுதிகளில் இருந்து வந்து யானைகள் பர்லியார், கே.என்.ஆர்.நகர், மரப்பாலம், காட்டேரி ஆகிய பகுதிகளில் உணவு தேடி உலா வருகின்றன. யானைகளை கண்காணித்து விரட்டும் பணியில் ஈடுபட்டும், அந்த யானைகள் வனப்பகுதிக்குள் செல்வதில்லை.

கடந்த சில நாட்களாக தேயிலை தோட்டத்தில் முகாமிட்டு இருந்த காட்டு யானைகளால், தேயிலை தோட்ட பாராமரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டது. இந்தநிலையில் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் உள்ள மயானத்தில் 9 யானைகள் முகாமிட்டு உள்ளன. இதனால் அந்த வழியாக கிராம மக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

காட்டேரிக்கு அருகே குடியிருப்பு பகுதியில் வாழை மரங்கள் அதிகமாக உள்ளன. எனவே, அந்த குடியிருப்பு பகுதிகளுக்குள் வராமல் யானைகளை விரட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story