வனவேங்கைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


வனவேங்கைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

நெல்லையில் வனவேங்கைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

நெல்லை:

நெல்லை வண்ணார்பேட்டையில் வனவேங்கைகள் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடமாநில குருவிக்காரர் மற்றும் நக்கலே என உண்மையான சாதி பெயர் கொண்ட மக்களை, குருவிக்காரர் அல்லது நரிக்காரர் அல்லது நக்கலே என்று பெயர் வைத்து அழைக்க வேண்டும். மதுரையில் தமிழ் சங்கம் வளர்த்த பெண்பாற்புலவர் குறமகள் இளவெயினி அம்மையாருக்கு நூலகத்துடன் கூடிய முழு உருவ சிலை, மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை மாவட்ட செயலாளர் சூர்யா தலைமை தாங்கினார். தலைவர் முத்து, மாநில பொதுச் செயலாளர் உலகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் துரை பாண்டியன், தமிழர் உரிமை மீட்பு களம் லெனின் கென்னடி, மாவட்ட பொருளாளர் மாரியப்பன், ஆலோசகர் மாதவன், குறிஞ்சி சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story