கேத்தி மந்தாடா வனப்பகுதியில் காட்டுத்தீ


கேத்தி மந்தாடா வனப்பகுதியில் காட்டுத்தீ
x
தினத்தந்தி 25 Feb 2023 12:15 AM IST (Updated: 25 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கேத்தி மந்தாடா வனப்பகுதியில் காட்டுத்தீ

நீலகிரி

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை பனிப்பொழிவு நீடிக்கும். குறிப்பாக ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பனியின் தாக்கம் அதிகமாக காணப்படும். இதுபோன்ற சமயங்களில் வனப்பகுதிகள் மற்றும் விளைநிலங்கள் பசுமையை இழந்துவிடும். அப்போது ஆங்காங்கே காட்டு தீ ஏற்படுவது வழக்கம்.

இந்த நிலையில் ஊட்டியில் கடந்த சில நாட்களாக நன்றாக பெய்த உறை பனி காரணமாக பல இடங்களில் செடி, கொடிகள் கருகி கிடக்கிறது. இதன் காரணமாக நேற்று முன்தினம் ஊட்டி அருகே உள்ள கேத்தி மந்தாடா வனப்பகுதியில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. இதில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவிலான செடி, கொடிகள் எரிந்து நாசமாயின. இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் காட்டு தீயை அணைத்தனர். மேலும் காட்டுத்தீ அபாயம் உள்ள இடங்களை கண்காணித்து வருகின்றனர்.


Next Story