2 மாதங்களாக காலில் காயத்துடன் குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரியும் சிறுத்தை - சிகிச்சை அளிக்க வனஉயிர் ஆர்வலர்கள் கோரிக்கை


2 மாதங்களாக காலில் காயத்துடன் குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரியும் சிறுத்தை - சிகிச்சை அளிக்க வனஉயிர் ஆர்வலர்கள் கோரிக்கை
x

இரண்டு மாதங்களாக காலில் காயத்துடன் சுற்றிவரும் சிறுத்தையை பிடித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று வனஉயிர் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. உணவு மற்றும் தண்ணீருக்காக சிறுத்தைகள் குடியிருப்பு பகுதிகளில் சர்வ சாதாரணமாக உலா வருகின்றன.

இந்த நிலையில் குன்னூர் அருகே உள்ள அருவங்காடு அருகே பாலாஜி நகர் என்ற குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் சிறுத்தை ஒன்று காலில் காயத்துடன் நடந்து செல்லும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த நிலையில் மீண்டும் தற்போது அதே சிறுத்தை காலில் காயமுடன் குடியிருப்பு பகுதியில் உலா வரும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் வனஉயிர் ஆர்வலர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு மாதங்களாக காலில் காயத்துடன் சுற்றிவரும் சிறுத்தையை வனத்துறையினர் பிடித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று வனஉயிர் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story