வன உயிரின வாரவிழா: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கலை இலக்கிய போட்டிகள்
வன உயிரின வாரவிழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கலை இலக்கிய போட்டிகள் நடக்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் வன உயிரின வாரவிழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கலை இலக்கிய போட்டிகள் வருகிற 25-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
கலை இலக்கிய போட்டி
தூத்துக்குடி மாவட்ட வனத்துறை சார்பில் வனஉயிரின வார விழாவை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இடையே வன உயிரினங்கள் தொடர்பான விழிப்புணர்வு எற்படுத்தும் வகையில் தமிழ், ஆங்கில பேச்சுப் போட்டி, வினாடி வினா போட்டி மற்றும் ஓவியப் போட்டிகள் வருகிற 25-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் 10 மணி வரை தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது.
தலைப்புகள்
இதில் "வனஉயிரினங்கள் பாதுகாப்பில் நமது பங்களிப்பு மற்றும் வன உயிரினங்களைபாதுகாத்தலின் அவசியம்" என்ற தலைப்பில் ஓவிய போட்டியும், சுற்றுச்சூழல், வனம் மற்றும் வன உயிரினம் என்ற தலைப்பில் வினாடி-வினா போட்டியும், மனிதன்-வன உயிரினங்களுக்கு இடையிலான சக வாழ்வு என்ற தலைப்பில் பேச்சு போட்டியும் நடக்கிறது. போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ள மாணவ, மாணவிகள் நேரடியாக போட்டிகளில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு செல்போன் எண்: 95975 95499, 95974 77906 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.