சீர்காழி பனங்காட்டங்குடி சாலையில் மேம்பாலம் அமைக்கப்படுமா?


சீர்காழி பனங்காட்டங்குடி சாலையில் மேம்பாலம் அமைக்கப்படுமா?
x

அடிக்கடி ரெயில்வே கேட் மூடப்படுவதால் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்துக்கிடப்பதால் சீர்காழி பனங்காட்டங்குடி சாலையில் மேம்பாலம் அமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

மயிலாடுதுறை

சீர்காழி:

அடிக்கடி ரெயில்வே கேட் மூடப்படுவதால் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்துக்கிடப்பதால் சீர்காழி பனங்காட்டங்குடி சாலையில் மேம்பாலம் அமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

ரெயில்வே கேட்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பனங்காட்டங்குடி சாலையில் ெரயில்வே கேட் உள்ளது. இந்த ெரயில்வே கேட்டை கடந்துதான் கோவில்பத்து, பணமங்கலம், அகனி, தென்னங்குடி, வள்ளுவக்குடி, நிம்மேலி, மருதங்குடி, புங்கனூர், ஆதமங்கலம், பெருமங்கலம், கொண்டல், அகர எலத்தூர், பனங்காட்டங்குடி மற்றும் சீர்காழி நகர் பகுதியில் இருந்து புறவழிச்சாலை வழியாக சிதம்பரம், மயிலாடுதுறை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல வேண்டும்.

இந்த வழித்தடத்தில் 30 நிமிடத்திற்கு ஒருமுறை ெரயில் வந்து செல்வதால் அடிக்கடி ெரயில்வே கேட் மூடப்படுகிறது.

நீண்ட வரிசையில் நிற்கும் வாகனங்கள்

ரெயில்வே கேட் மூடப்படுவதால் சாலையில் இருபுறங்களிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் உள்ளிட்ட முக்கிய வாகனங்கள் கூட காத்திருக்கும் அவல நிலை உள்ளது.

இதன்காரணமாக அடிக்கடி உயிரிழப்பும் ஏற்படும் நிலை இருந்து வருகிறது. ரெயில் சென்ற பிறகு ரெயில்வே கேட்டை திறக்கும் போது வாகனங்கள் ஒன்றோடு ஒன்று முந்தி செல்ல முயலும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

மாணவ-மாணவிகள் அவதி

ஒரு சில நேரங்களில் விபத்துகள் ஏற்படுகிறது. ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் குறித்த நேரத்துக்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றன.

எனவே அரசு பனங்காட்டங்குடி சாலையில் உள்ள ெரயில்வே கேட்டுக்கு பதில் மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்துள்ளனர்.


Next Story