புதிய பயணிகள் நிழலகம் கட்டித்தரப்படுமா?
புதுப்பேட்டை மீனவ கிராமத்தில் புதிய பயணிகள் நிழலகம் கட்டித்தரப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனா்.
பொறையாறு:
புதுப்பேட்டை மீனவ கிராமத்தில் புதிய பயணிகள் நிழலகம் கட்டித்தரப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனா்.
சேதமடைந்த நிழலகம்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதுப்பேட்டை மீனவ கிராமத்தில் பழமையான பயணிகள் நிழலகம் உள்ளது. இந்த நிழலகத்தில் பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மீன்கள் விற்பனை செய்யும் பெண்கள் பஸ் ஏறி பல்வேறு ஊர்களுக்கு செல்கின்றனர்.சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த நிழலகம் தற்போது சிதிலமடைந்து, கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகிறது.
புதிய பயணிகள் நிழலகம்
கடல் உப்பு காற்றில் இந்த கட்டிடம் அரிக்கப்பட்டு எந்த நேரத்தில் நிழலகம் இடிந்து கீழே விழும் அபாயத்தில் உள்ளது. இதனால் பயணிகள் காயமடையும் அபாயம் உள்ளது. எனவே புதுப்பேட்டை மீனவ கிராமத்தில் உள்ள ஆபத்தான பயணிகள் நிழலகத்தை அகற்றிவிட்டு அந்த இடத்தில் புதிதாக பயணிகள் நிழலகம் கட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.