இடையக்கோட்டையில் மழைமானி அமைக்கப்படுமா?
இடையக்கோட்டை பகுதியில் துல்லியமாக மழை அளவை கணக்கிட மழைமானி அமைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.
திண்டுக்கல்
ஒட்டன்சத்திரத்தில் இருந்து பழனி செல்லும் சாலையில், 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சத்திரப்பட்டியில் மழைமானி வைத்து மழைஅளவீடு செய்யப்படுகிறது. இதனால் அதில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடையக்கோட்டையில் துல்லியமாக மழை அளவை கணக்கிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இடையக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்தாலும், மழை பெய்யவில்லை என்றே பதியப்படுகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், பயிர் சாகுபடியில் செய்வதில் சிரமம் ஏற்பட்டள்ளது. எனவே இடையக்கோட்டை பகுதியில் துல்லியமாக மழை அளவை கணக்கிட அங்கு புதிதாக மழைமானி பொருத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.
Related Tags :
Next Story