மார்த்தாண்டம் மேம்பால பஸ்நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்கப்படுமா?


மார்த்தாண்டம் மேம்பால பஸ்நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்கப்படுமா?
x
தினத்தந்தி 28 Sept 2022 12:15 AM IST (Updated: 28 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டம் மேம்பால பஸ்நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்கப்படுமா?

கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் உள்ள 2-வது பெரிய நகரமாக திகழ்வது மார்த்தாண்டம். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மார்த்தாண்டம் சந்திப்பில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வந்தது. இதற்கு தீர்வு காண மார்த்தாண்டம் பம்மத்தில் இருந்து வெட்டுமணி வரை சுமார் 2 கிேலா மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் அமைக்கப்பட்டது. அதன்பின்பு போக்குவரத்து நெருக்கடி ஓரளவு குறைந்துள்ளது. மேம்பாலம் அமைக்கப்பட்ட பின்பு திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் மார்க்கம் செல்லும் அரசு பஸ்கள் மற்றும் தனியார் வாகனங்கள் பாலத்தின் மீதுதான் ெசல்கின்றன.

நிழற்குடை இல்லை

எனவே, மார்த்தாண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான பொதுமக்கள் ேவலை, மருத்துவம் உள்ளிட்ட பல தேவைகளுக்கு நாகர்கோவிலுக்கு செல்கிறார்கள். இவர்கள் பஸ் ஏறுவதற்காக மார்த்தாண்டம் மேம்பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள பஸ் நிறுத்தத்தில் இருந்து பஸ் ஏறுவது வழக்கம்.

இந்த பஸ் நிறுத்தத்தில் இருந்து தினமும் ஏராளமான பொதுமக்கள் நாகர்கோவிலுக்கு பயணம் செய்கிறார்கள். ஆனால், இந்த பஸ் நிறுத்தத்தில் இதுவரை நிழற்குடை அமைக்கப்படவில்லை.

மேம்பாலம் அமைக்கப்படுவதற்கு முன்பு நாகர்கோவில் மார்க்கம் செல்லும் பஸ்கள் மார்த்தாண்டம் சந்திப்பு அருகே நின்று பயணிகளை ஏற்றிச்சென்றன. அப்போதும் அங்கு நிழற்குடை இல்லை. பின்னர் சந்திப்பு பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமானதால் இந்த பஸ் நிறுத்தம் மார்த்தாண்டம் சி.எஸ்.ஐ. வணிக வளாகம் அருேக மாற்றப்பட்டது. அங்கும் நிழற்குடை கட்டப்படவில்லை. தற்போது மேம்பாலம் கட்டிய பின்பும் பாலத்தின் மேல் பயணிகள் நின்று பஸ் ஏறுகிறார்கள். இங்கும் நிழற்குடை இல்லை.

நனைகிறோம்-காய்கிறோம்

இதனால், மழை காலங்களில் மழையில் நனைகிறோம், வெயில் காலங்களில் வெயிலில் காய்கிறோம் என்று பரிதாபத்தோடு சொல்கிறார்கள் மார்த்தாண்டம் பயணிகள். அவர்களும் தங்களுக்கு ஒரு விடிவுகாலம் பிறக்காதா? என்று ஏக்கத்தோடு எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

குறிப்பாக மழைக்காலங்களில் பாலத்தின் மேல் பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். அப்போது பாலத்தின் மேல் பகுதியில் குடைபிடித்து ெகாண்டு நிற்கும் போது குடை காற்றில் பறந்து பேராபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகிறது.

இவ்வாறு பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள இந்த பகுதியில் நிழற்குடை அமைக்க வேண்டும் என்பது பலதரப்பட்ட மக்களின் கோரிக்கையாக உள்ளது.

கால் வலிக்க நிற்க வேண்டும்

இதுகுறித்து மார்த்தாண்டத்ைத சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் ரெஜூ கூறியதாவது:-

நான் நாகர்கோவிலில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். இதற்காக தினமும் மார்த்தாண்டத்தில் இருந்த பஸ்சில் சென்று வருகிறேன். நாகர்கோவில் செல்வதற்காக மார்த்தாண்டம் மேம்பாலத்தில் இருந்து பஸ் ஏறுவது வழக்கம். இந்த பஸ் நிறுத்தத்தில் இதுவரை நிழற்குடை அமைக்கவில்லை. இங்கு காலை, மாலை நேரங்களில் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும்.

நிழற்குடை இல்லாததால் பஸ்சுக்கு காத்து நிற்கிறவர்கள் அமர முடியாமல் கால் வலிக்க நிற்க வேண்டியது உள்ளது. மதிய வேளைகளில் பாலத்தில் அடிக்கும் கடுமையாக வெயிலின் மத்தியில் நிற்க வேண்டும். குறிப்பாக முதியவர்கள், ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகள், குழந்தைகள் போன்றவர்கள் வெயிலிலும், மழையிலும் ஒதுங்கி நிற்கவோ, அமரவோ முடியாமல் மிகவும் அவதிப்படுகிறார்கள். மாவட்டத்தில் உள்ள சிறு சிறு பஸ் நிறுத்தத்தில் கூட பாதுகாப்பான நிழற்குடை உள்ளது. ஆனால், மிகப்பெரிய நகரமான மார்த்தாண்டத்தில் பொதுமக்கள் அதிகம் பேர் வந்து செல்லும் பஸ் நிறுத்தத்தில் இதுவரை நிழற்குடை இல்லாதது துரதிஷ்டவசமானது. எனவே, இங்கு பயணிகள் நலன்கருதி நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மார்த்தாண்டம் நகர வர்த்தக சங்க தலைவர் தினகர் கூறியதாவது:-

மார்த்தாண்டம் மேம்பாலம் வழியாக நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் பஸ்களும், திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் பஸ்களும் சென்று வருகின்றன. திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் பஸ்களில் ஏறுவதற்காக மேம்பாலத்தில் மார்த்தாண்டம் பகுதியில் பஸ் நிறுத்தம் உள்ளது. தினமும் ஏராளமான பயணிகள் பலத்தில் பஸ்சிற்காக காத்து நிற்பது வழக்கம். ஆனால், அங்கு பயணிகள் நிற்பதற்கு நிழற்குடை அமைக்கப்படவில்லை. அங்கு அமர்வதற்கான வசதிகளும் இல்லை. எனவே, பஸ்சிற்காக காத்திருக்கும் முதியோர், பெண்கள், குழந்தைகள் கடும் வெயில், மழையிலும் காத்திருக்கவணே்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே, பயணிகள் நலன் கருதி மேம்பாலத்தில் நாகர்கோவில் செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்தில் நிழற்குடை அமைத்து, இருக்ைக வசதிகளையும் ஏற்படுத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதேபோல ஏராளமான பயணிகள் மார்த்தாண்டம் மேம்பால பஸ்நிறுத்தத்தில் நிழற்குடை வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக முயற்சி எடுத்து நிழற்குடை அமைப்பார்கள் என்ற நம்பிக்கையும் பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது.


Next Story