பள்ளி, கல்லூரி நேரங்களில் கூடுதல் பஸ் இயக்கப்படுமா?


பள்ளி, கல்லூரி நேரங்களில் கூடுதல் பஸ் இயக்கப்படுமா?
x

அதிராம்பட்டினத்தில் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொள்வதால் பள்ளி, கல்லூரி நேரங்களில் கூடுதல் பஸ் இயக்கப்படுமா? என மாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

தஞ்சாவூர்

அதிராம்பட்டினம்:

அதிராம்பட்டினத்தில் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொள்வதால் பள்ளி, கல்லூரி நேரங்களில் கூடுதல் பஸ் இயக்கப்படுமா? என மாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

பள்ளி, கல்லூரி

அதிராம்பட்டினம் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள், கலைக்கல்லூரி, அரசு என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி பள்ளி உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்கள் உள்ளன.

இந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் நேரங்களில் காலை, மாலையில் தனியார் மற்றும் அரசு பஸ்கள் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும். இதனால் மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியப்படி ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்து

இவ்வாறு அதிக நபர்களை ஏற்றிச்சென்ற ஒரு தனியார் பஸ், சில ஆண்டுகளுக்கு முன் அதிராம்பட்டினம் காளிகோவில் அருகே நிலை தடுமாறி கவிழ்ந்து 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பலத்த காயமடைந்தனர். இந்த சம்பவத்துக்கு பிறகும் கூடுதல் பஸ் இயக்காததால் தினமும் மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

மாலையில் வகுப்புகள் முடிந்த பின்னர் நீண்ட நேரத்துக்கு பிறகு அதிராம்பட்டினம் வழியாக பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை வரை செல்லும் பஸ்சில் கூட்டம் அதிக அளவில் காணப்படும். அப்போது அந்த வழித்தடத்தில் உள்ள நிறுத்தத்தில் நிறுத்தும் போது அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் மாணவர்கள், பொதுமக்கள் ஏற முடியாமல் மிகவும் சிரமம் அடைகின்றனர்.

கூடுதல் பஸ் இயக்க வேண்டும்

இதுகுறித்து கல்லூரி மாணவர்கள் கூறுகையில், பொதுவாகவே அதிராம்பட்டினத்தில் இருந்து பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை செல்லும் பஸ்களில் கூட்டம் அதிக அளவில் இருக்கும். இதனால் மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் நின்று கொண்டு பயணம் செய்யும் நிலை ஏற்படுகிறது. பஸ்சில் கூட்டம் அதிக அளவில் இருப்பதால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே பள்ளி,கல்லூரி நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story