வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகத்தில் சேதமடைந்த 'டைல்ஸ் கற்கள்' மாற்றப்படுமா?


வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகத்தில் சேதமடைந்த டைல்ஸ் கற்கள் மாற்றப்படுமா?
x
தினத்தந்தி 5 Jan 2023 12:15 AM IST (Updated: 5 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருக்கடையூரில் வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகத்தில் சேதமடைந்த ‘டைல்ஸ் கற்கள்’ மாற்றப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

மயிலாடுதுறை

திருக்கடையூர்:

திருக்கடையூரில் வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகத்தில் சேதமடைந்த 'டைல்ஸ் கற்களை' மாற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகம்

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் மெயின் ரோட்டில் வேளாண்மை விரிவாக்க மைய அலுவலக கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் 2 தளங்களுடன் ரூ.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு 20-க்கும் மேற்பட்ட வேளாண்மை மற்றும் தோட்டக்கலை ஊழியர்கள் பணி செய்து வருகின்றனர்.

இந்த வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகத்திற்கு செம்பனார்கோவில், காளகஸ்திநாதபுரம், மடப்புரம், ஆக்கூர், அன்னப்பன்பேட்டை, திருக்கடையூர், பூந்தாழை, தளச்சங்காடு, காலமநல்லூர், டி.மணல்மேடு, கிள்ளியூர், பிள்ளை பெருமாள் நல்லூர், மாத்தூர், மாமாகுடி உள்ளிட்ட 66 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தினந்தோறும் வந்து விவசாய தொழில்நுட்ப செய்திகள் அறிந்து கொள்வது, விவசாய நல திட்டங்களை தெரிந்து கொள்வது, பிரதம மந்திரி கவுரவ நிதி பெறுவது, பயிர் காப்பீட்டு பெறுவது உள்ளிட்ட பல்வேறு விவசாய சம்பந்தமான ஆலோசனைகளை பெற்று செல்கின்றனர்.

'டைல்ஸ் கற்கள்' சேதம்

தற்போது வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகத்தில் கீழ்தளம் மற்றும் மேல் தளத்தில் பதிக்கப்பட்டிருந்த 'டைல்ஸ் கற்கள்' உடைந்து சேதம் அடைந்துள்ளது. இதனால் அலுவலக ஊழியர்கள், விவசாயிகள் நடந்து செல்லும் போது ேசதமடைந்த கற்கள் காலில் குத்தி காயம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. மேலும் கட்டிடத்தில் சிமெண்டு காரைகளும் பெயர்ந்து உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த 'டைல்ஸ் கற்களை' மாற்றி தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாற்ற வேண்டும்

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்:-

திருக்கடையூரில் உள்ள வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகத்திற்கு விவசாயம் சார்ந்த பணிகளுக்காக அலுவலகம் சென்று வருகிறோம். ஆனால் அலுவலகத்தில் பதிக்கப்பட்டுள்ள 'டைல்ஸ் கற்கள்' பெயர்ந்து உடைந்து சேதமடைந்து உள்ளதால் தடுமாறி கீழே விழுந்து காயம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து வேளாண்மை விரிவாக்க மைய அலுவலக கட்டிடத்தில் உடைந்து சேதம் அடைந்துள்ள 'டைல்ஸ் கற்களை' மாற்ற வேண்டும் என்றனர்.


Next Story