வீணாகும் தண்ணீரை சேமிக்க தடுப்பணை கட்டப்படுமா?


வீணாகும் தண்ணீரை சேமிக்க தடுப்பணை கட்டப்படுமா?
x
தினத்தந்தி 13 Nov 2022 12:15 AM IST (Updated: 13 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ரேலியா அணையில் இருந்து வீணாகும் தண்ணீரை சேமிக்க தடுப்பணை கட்டப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

நீலகிரி

குன்னூர்,

ரேலியா அணையில் இருந்து வீணாகும் தண்ணீரை சேமிக்க தடுப்பணை கட்டப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

ரேலியா அணை

குன்னூர் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளது. இங்கு 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். நருக்கு குடிநீர் வழங்வதில் முக்கிய நீராதாரமாக ரேலியா அணை உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த அணையின் கொள்ளளவு 43.7 அடியாக உள்ளது. குன்னூரில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் பந்துமி பகுதியில் அடர்ந்த வனப்பகுதியில் அணை உள்ளது.

அப்பகுதியில் பலத்த மழை பெய்யும் போது அணை நிரம்பி வழிகிறது. பருவழை பொய்க்கும் காலங்களில், அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து விடும். அந்த நேரங்களில் குன்னூர் நகராட்சி மக்களுக்கு 10 நாட்கள் முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த 2 மாதங்களாக குன்னூர் பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த மாதம் 24-ந் தேதி ரேலியா அணை நிரம்பியது.

தண்ணீரை சேமிக்க வேண்டும்

இதனால் அணை முழு கொள்ளளவை எட்டி ரம்மியமாக காட்சி அளித்து வருகிறது. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளதால், தொடர்ந்து அணை நிரம்பி தண்ணீர் வீணாக வெளியேறி கொண்டிருக்கிறது. இதனால் அங்கு வீணாகும் தண்ணீரை சேமித்து வைக்க தடுப்பணை கட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ஆங்கிலேயர் காலத்தில் அப்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ரேலியா அணை கட்டப்பட்டது. தற்போது மக்கள்தொகை அதிகரித்து உள்ளது. எனவே, மழைக்காலங்களில் அணையில் இருந்து வீணாகும் தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் குறைவாக மழை பெய்யும் சமயங்களில் பொதுமக்களுக்கு தடையில்லாமல் குடிநீர் வழங்க முடியும். ஆகவே, வீணாகும் தண்ணீரை சேமிக்க தடுப்பணை கட்ட வேண்டும். மேலும் வீணாகும் தண்ணீரை தினமும் நகராட்சி மக்களுக்கு வினியோகம் செய்ய வேண்டும் என்றனர்.


Next Story