புதிதாக கட்டப்பட்டுள்ள நடுவட்டம் பஸ் நிலையத்துக்கு மகாத்மா காந்தி பெயர் மீண்டும் வைக்கப்படுமா?-பொதுமக்கள் எதிர்பார்ப்பு


புதிதாக கட்டப்பட்டுள்ள நடுவட்டம் பஸ் நிலையத்துக்கு மகாத்மா காந்தி பெயர் மீண்டும் வைக்கப்படுமா?-பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 2 Feb 2023 12:15 AM IST (Updated: 2 Feb 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

நடுவட்டம் பஸ் நிலையத்துக்கு மீண்டும் மகாத்மா காந்தி பெயர் வைக்கப்படுமா? என பேரூராட்சி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

நீலகிரி

கூடலூர்

நடுவட்டம் பஸ் நிலையத்துக்கு மீண்டும் மகாத்மா காந்தி பெயர் வைக்கப்படுமா? என பேரூராட்சி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

காந்திஜி நினைவு பஸ் நிலையம்

கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நடுவட்டம் பேரூராட்சி அமைந்துள்ளது. கேரளா- கர்நாடகா உள்பட வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் கூடலூர், நடுவட்டம் வழியாக ஏராளமானவர்கள் ஊட்டிக்கு சென்று திரும்புகின்றனர். இது தவிர தமிழகமுள்பட பல்வேறு மாநில அரசு பஸ்களும் இயக்கப்படுகிறது. இதனால் நடுவட்டம் பஸ் நிலையத்துக்கு அனைத்து பஸ்களும் வந்து செல்கிறது.

கடந்த 1975-ம் ஆண்டு காந்திஜி நினைவாக நடுவட்டத்தில் பஸ் நிலையம் கட்டப்பட்டது. நாளடைவில் மக்கள் எண்ணிக்கை மற்றும் வாகனங்கள் வரத்து அதிகரிப்பால் பஸ் நிலையத்தில் போதிய இட வசதி இல்லாமல் இருந்தது. மேலும் பஸ் நிலைய மேற்கூரைகள் உட்பட கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. இதனால் மழைக்காலத்தில் வியாபாரிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

மீண்டும் பெயர் வைக்கப்படுமா?

இதைத்தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடுவட்டம் பஸ் நிலையம் இடிக்கப்பட்டது. தொடர்ந்து நிதி ஒதுக்கப்பட்டு புதிய பஸ் நிலையம் கட்டும் பணி கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது வணிக வளாகங்களுடன் கூடிய பஸ் நிலைய கட்டுமான பணி நிறைவு பெறும் தருவாயில் உள்ளது.

தொடர்ந்து நடுவட்டம் பேரூராட்சி பஸ் நிலையம் என பெயர் எழுதப்பட்டுள்ளது. ஆனால் நடுவட்டம் பேரூராட்சி மகாத்மா காந்தி நினைவு பஸ் நிலையம் என மீண்டும் பெயரிட வேண்டும் என பேரூராட்சி மக்கள் எதிர்பார்த்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story