இடைத்தேர்தலில் பணியாற்றும்தேர்தல் அலுவலர்களுக்கு 3-ம் கட்ட பயிற்சி
3-ம் கட்ட பயிற்சி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், இடைத்தேர்தலையொட்டி ஓட்டுப்பதிவுக்கான பணியில் 1,206 அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர். இவர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்துவது, தேர்தல் தினத்தன்று கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து 3 கட்டங்களாக பயிற்சி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ஈரோடு ஆர்.ஏ.என்.எம். கல்லூரியில் 2 கட்ட பயிற்சிகள் நிறைவடைந்தது.
இந்தநிலையில் 3-வது கட்ட பயிற்சி அதே கல்லூரியில் நேற்று நடைபெற்றது. அவர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், விவி பேட் கருவிகள் ஆகியவற்றின் செயல்பாடுகள், பழுது ஏற்பட்டால் அதை சரி செய்வது, வாக்காளர்களின் விவரங்களை வாக்காளர் பட்டியலில் சரிபார்ப்பது தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது.