பஸ் நிலைய கட்டுமான பணி விரைந்து முடிக்கப்படுமா?


பஸ் நிலைய கட்டுமான பணி விரைந்து முடிக்கப்படுமா?
x

நடுவட்டத்தில் புதிய பஸ் நிலையம் கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

நீலகிரி

கூடலூர்,

நடுவட்டத்தில் புதிய பஸ் நிலையம் கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

பஸ் நிலையம்

கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நடுவட்டம் பேரூராட்சி உள்ளது. கேரளா, கர்நாடகா உள்பட வெளிமாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கூடலூர், நடுவட்டம் வழியாக ஊட்டி மற்றும் முதுமலைக்கு சென்று திரும்புகின்றனர். இதனால் நடுவட்டம் பஜார் வழியாக அனைத்து வாகனங்களும் இயக்கப்படுகிறது.

பேரூராட்சிக்கு உட்பட்ட டி.ஆர்.பஜார், பைக்காரா உள்பட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராமமக்கள் நடுவட்டம் வந்து செல்கின்றனர். இதேபோல் அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகளுக்காக கூடலூர் அல்லது ஊட்டிக்கு சென்று வருகின்றனர். இந்தநிலையில் பேரூராட்சி மக்கள் பயன்படுத்தி வந்த பஸ் நிலையம் போதிய இடவசதி இல்லாமல் இருந்து வந்தது. இதனால் பல்வேறு கோரிக்கைக்கு பிறகு பஸ் நிலைய கட்டிடம் மற்றும் வணிக வளாகங்கள் இடித்து அகற்றப்பட்டது.

விரைவு பெறுமா?

தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.3 கோடி செலவில் வணிக வளாகங்கள் உடன் கூடிய புதிய பஸ் நிலையம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. ஆனால், கொரோனா பரவல் கட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் பணியில் தொய்வு ஏற்பட்டது. தற்போது இயல்பு நிலை திரும்பி உள்ள நிலையில், புதிய பஸ் நிலைய கட்டுமான பணி விரைந்து நடைபெறவில்லை. இதனால் பொதுமக்கள், வெளியூர் பயணிகள் மழைக்கு ஒதுங்கி நிற்க கூட முடியாமல் சிரமப்படுகின்றனர்.

இதனால் புதிய பஸ் நிலையத்தை விரைந்து கட்ட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, 21/2ஆண்டுகளுக்கு மேலாக பஸ் நிலையம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில், இன்னும் பணி முடிவடைய வில்லை. இதனால் பயணிகள் மழையில் நிற்க வேண்டிய நிலை தொடர்கிறது. எனவே, பஸ் நிலையத்தை விரைவாக கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Related Tags :
Next Story