வல்லம்-ஆலக்குடி உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?
வல்லம்-ஆலக்குடி உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?
2 ஆண்டுகளாக நடந்து வரும் வல்லம்-ஆலக்குடி உயர்மட்ட பாலம் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று விவசாயிகள்-மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பாலம் கட்டும் பணிகள்
வல்லம்- ஆலக்குடி வழியாக தினமும் ஆலக்குடி, கல்விராயன்பேட்டை, சித்திரக்குடி, பூதலூர் பகுதிகளுக்கு மாணவர்கள், பொதுமக்கள் வாகனங்களில் சென்று வருகின்றனர். பூதலூர்- வல்லம் வழியாக மருத்துவக்கல்லூரி, தஞ்சை வரை டவுன் பஸ்சும் இயக்கப்படுகிறது. தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இதன் வழியே சென்று வருகின்றன. மழைக்காலத்தில் பேய்வாரியில் அதிகளவு தண்ணீர் வந்தால் இந்த சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்படும். சாலை தெரியாத அளவிற்கு தண்ணீர் ஓடும். இதை கருத்தில் கொண்டு பழைய பாலத்தை இடித்துவிட்டு அகலப்படுத்தி உயர்மட்ட பாலமாக கட்டும் பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. இ்ந்த பணிகள் இன்னும் முடியவில்லை. ஆனால் இந்த பால பணிகள் தொடங்கிய நேரத்தில் தஞ்சை மாவட்டத்தில் தொடங்கப்பட்ட பல பாலப்பணிகள் நடந்து முடிந்து போக்குவரத்து சென்று வருகிறது.
தற்காலிக பாதை
இந்த பாலம் கட்டும் பணியால் வாகனங்கள் சென்று வர தற்காலிக பாதை அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த நவம்பர், டிசம்பர் மாதத்தில் பெய்த கனமழையால் தற்காலிக பாதை சேறும், சகதியுமாக மாறியது. இதனால் விவசாய பணிகள் மேற்கொள்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது.
ஆலக்குடி, கல்விராயன்பேட்டை பகுதிகளிலிருந்து ஏராளமான மாணவர்கள் வல்லம், தஞ்சையில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படித்து வருகின்றனர். மழைக்காலத்தில் தற்காலிக பாதை சேறும், சகதியுமாக மாறுவதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இருசக்கர வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
விரைந்து முடிக்க வேண்டும்
தற்போது சம்பா, தாளடி அறுவடைப்பணிகள் முடிந்து நெல் கொள்முதல் பணிகள் நடந்து வருகிறது. கொள்முதல் நிலையத்திலிருந்து லாரிகள், அறுவடை எந்திரங்களும் இந்த தற்காலிக பாதையில் சென்று வருகின்றன. இந்த பாதை மண் பாதையாக உள்ளது.
இதனால் மிகுந்த சிரமத்துடன் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் பாலப்பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும் என்று மா