மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பு வெட்டாறு தூர்வாரப்படுமா?
செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கும் வெட்டாற்றை மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பு தூர்வாரப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
மெலட்டூர்:
செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கும் வெட்டாற்றை மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பு தூர்வாரப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
புதர் மண்டி கிடக்கும் வெட்டாறு
பாபநாசம் தாலுகா மெலட்டூரில் இருந்து கிழக்கே தென்கரை ஆலத்தூர் வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை வெட்டாற்றின் பெரும்பகுதியில் மணல் திட்டுகள் உருவாகியுள்ளது. இதில், நாணல்கள் மற்றும் காட்டாமணக்குசெடிகள், சீமை கருவேல மரங்கள் ஆகியவை வளர்ந்து ஏராளமாக வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இதனால் இந்த ஆற்றின் மூலம் பாசன வசதி பெறும் விளைநிலங்களுக்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு பயிர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக விளைநிலங்கள் தரிசு நிலமாக மாறிவருகிறது. இதனால் விவசாயம் செய்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது. தமிழக அரசு விவசாயத்தை பாதுகாக்க இந்த ஆண்டு மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பாகவே வெட்டாறு உள்பட பாசன ஆறுகளை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கும் வெட்டாற்றை மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பு தூர்வாரப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
தூர்வார வேண்டும்
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தஞ்சை மாவட்டத்தில் உள்ள வெட்டாறு உள்பட பாசன ஆறுகள் பல ஆண்டுகளாக முழுமையாக தூர்வாரப்படாததால் மணல் திட்டுகள் ஏற்பட்டு, அதில் புல், பூண்டுகள், நாணல்கள் அதிகளவில் மண்டி கிடக்கின்றன.மேலும் ஆறுகளில் உள்ள மணலையும் சமூக விரோதிகள் திருட்டு தனமாக அள்ளி விடுவதால் நாளுக்கு நாள் ஆறுகளில் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது.
ஆற்றில் தண்ணீர் திறந்து விட்டாலும், பாசன வாய்க்கால்களில் தண்ணீர் வருவதில்லை வெட்டாற்றில் உள்ள மணல்திட்டுகளை முழுமையாக சமப்படுத்தி, நாணல், காட்டாமணிக்கு செடிகளை அகற்றி வெட்டாற்றை மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பு முழுமையாக தூர்வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.