சேதமடைந்த சமுதாய கூட கட்டிடம் சீரமைக்கப்படுமா?


சேதமடைந்த சமுதாய கூட கட்டிடம் சீரமைக்கப்படுமா?
x
தினத்தந்தி 8 April 2023 12:15 AM IST (Updated: 8 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கூத்தாநல்லூர் அருகே சேதமடைந்த சமுதாய கூட கட்டிடம் சீரமைக்கப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் அருகே சேதமடைந்த சமுதாய கூட கட்டிடம் சீரமைக்கப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

சேதமடைந்த சமுதாய கூட கட்டிடம்

கூத்தாநல்லூர் அருகே உள்ள சேகரை கிராமத்தில் அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் திருமணம், காதணி விழா மற்றும் அரசு சார்ந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள், அரசு சார்ந்த கூட்டங்கள் போன்றவற்றை எளிய முறையில் நடத்திட ஏதுவாக சமுதாய கூட கட்டிடம் கட்டப்பட்டது.

அதன்படி சேகரை கிராமத்தை சேர்ந்த மக்கள் சமுதாய கூடத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக சமுதாய கூட கட்டிடம் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது.

விரிசல் ஏற்பட்டு மழைநீர் கசிகிறது

கட்டிடத்தின் மேற்கூரை மற்றும் கட்டிடத்தின் சில இடங்களில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விரிசல்கள் ஏற்பட்டு உள்ளன. மழை காலங்களில் கட்டிடத்தில் தண்ணீர் கசிந்து வருகிறது. மேலும், கட்டிடத்தில் அமைக்கப்பட்ட ஜன்னல்கள் சில உடைந்தும், சேதமடைந்தும் காணப்படுகிறது.

இதனால், சமுதாய கூடத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. சமுதாய கூடம் சேதமடைந்த நிலையில் உள்ளதால், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

சீரமைக்க வேண்டும்

சமுதாய கூட கட்டிடம் முழுமையாக பழுதடைந்து இடிந்து விழுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சமுதாய கூட கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் அல்லது அதை இடித்து விட்டு அதே இடத்தில் புதிதாக சமுதாய கூடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Next Story