சேதமடைந்த அரசு பள்ளி கட்டிடம் சீரமைக்கப்படுமா?
கூத்தாநல்லூர் அருகே குலமாணிக்கத்தில் சேதமடைந்த அரசு பள்ளி கட்டிடம் சீரமைக்கப்படுமா? என பெற்றோர் எதிர்பார்த்துள்ளனர்.
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் அருகே குலமாணிக்கத்தில் சேதமடைந்த அரசு பள்ளி கட்டிடம் சீரமைக்கப்படுமா? என பெற்றோர் எதிர்பார்த்துள்ளனர்.
சேதமடைந்த அரசு பள்ளி கட்டிடம்
கூத்தாநல்லூர் அருகே உள்ள குலமாணிக்கத்தில் கிராமப்புற மாணவர்கள் கல்வி கற்பதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்க பள்ளி கட்டப்பட்டது.
இந்த அரசு தொடக்கப்பள்ளியில் குலமாணிக்கம் மற்றும் அதன் அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், அந்த பள்ளிக்கட்டிடம் கடந்த சில ஆண்டுகளாக சேதமடைந்தது காணப்படுகிறது.
வகுப்பறைக்குள் மழைநீர் கசிகிறது
குறிப்பாக பள்ளி கட்டிடத்தின் முகப்பில் உள்ள மேற்கூரை பகுதியில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன.
மேலும், கட்டிடத்தில் சிறு, சிறு விரிசல்கள் ஏற்பட்டு, அதன் மூலம் மழைநீர் கசிவதால் மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்து கல்வி கற்பதில் சிரமம் அடைந்து வருகின்றனர்.
சீரமைக்க வேண்டும்
தற்போது மழை காலம் என்பதால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பவே அச்சமாக உள்ளதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.