சேதமடைந்துள்ள மகப்பேறு சிகிச்சை பிரிவு கட்டிடம் சீரமைக்கப்படுமா?


சேதமடைந்துள்ள மகப்பேறு சிகிச்சை பிரிவு கட்டிடம் சீரமைக்கப்படுமா?
x

சேதமடைந்துள்ள மகப்பேறு சிகிச்சை பிரிவு கட்டிடம் சீரமைக்கப்படுமா?

திருவாரூர்

வலங்கைமான்:

வலங்கைமான் அரசு ஆஸ்பத்திரியில் சேதமடைந்துள்ள மகப்பேறு சிகிச்சை பிரிவு கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மகப்பேறு சிகிச்சை பிரிவு கட்டிடம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் அரசு வட்டார ஆஸ்பத்திரி அமைந்துள்ளது. பழமையான கட்டிடத்தில் இயங்கி வந்த இந்த ஆஸ்பத்திரிக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கூடுதல் வசதியுடன் புதிய கட்டிடம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.

மேலும் மகப்பேறு மற்றும் பல்வேறு மருத்துவ சிகிச்சைக்கு படுக்கை வசதியுடன் கூடிய கட்டிடமும் கட்டப்பட்டுள்ளது.

சீரமைக்கப்படுமா?

தற்போது மகப்பேறு சிகிச்சை பிரிவு கட்டிடத்தின் சுற்று சுவர்கள் சேதமடைந்துள்ளது. மேலும் சிமெண்டு காரைகள் பெயர்ந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. கட்டிடத்தின் சிமெண்டு தூண்களும் சேதமடைந்துள்ளது. கட்டிடத்தில் செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளுக்கு இந்த கட்டிடத்தால் விபத்து ஏற்படுமோ? என்ற அச்சம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்துள்ள வலங்கைமான் அரசு ஆஸ்பத்திரி மகப்பேறு பிரிவு கட்டிடத்தை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story