சேதமடைந்த பழைய ரேஷன் கடை கட்டிடம் சீரமைக்கப்படுமா?


சேதமடைந்த பழைய ரேஷன் கடை கட்டிடம் சீரமைக்கப்படுமா?
x

திருக்கண்ணபுரத்தில் சேதமடைந்த பழைய ரேஷன் கடை கட்டிடம் சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருக்கண்ணபுரத்தில் சேதமடைந்த பழைய ரேஷன் கடை கட்டிடம் சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

சேதமடைந்த ரேஷன் கடை

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் ஊராட்சியில் சுமார் 940 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இந்த ஊராட்சியில் திருப்புகலூர் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்திற்குட்பட்ட ரேசன் கடைஉள்ளது. இந்த கட்டிடம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 1 ஆண்டுக்கு மேல் இந்த ேரஷன் கடை கட்டிடம் எந்தவித பராமரிப்பும் இன்றி காணப்படுகிறது. ரேஷன் கடையின் தரைகளில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்தும், கட்டிடம் முழுவதும் சேதமடைந்து உள்ளது. இதனால் அருகில் உள்ள வாடகை கட்டிடத்தில் தற்காலிகமாக ரேசன் கடை செயல்பட்டு வருகிறது.

வாடகை கட்டிடத்தில் இயங்குகிறது

இந்த தற்காலிக கட்டிடம் இருப்பதால் பழைய கட்டிடத்தை புதுப்பிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. சொந்த கட்டிடம் உள்ள நிலையில் மாதம் ரூ.2 ஆயிரம் வாடகை செலுத்தி வாடகை கட்டிடத்தில் ரேஷன் கடை செயல்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழைய ரேஷன் கடை கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Next Story