சேதமடைந்த பயணிகள் நிழலகம் சீரமைக்கப்படுமா?


சேதமடைந்த பயணிகள் நிழலகம் சீரமைக்கப்படுமா?
x
தினத்தந்தி 31 March 2023 12:15 AM IST (Updated: 31 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவெண்காடு அருகே கோட்டகத்தில் சேதமடைந்த பயணிகள் நிழலகம் சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

மயிலாடுதுறை

திருவெண்காடு:

திருவெண்காடு அருகே கோட்டகத்தில் சேதமடைந்த பயணிகள் நிழலகம் சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

பயணிகள் நிழலகம்

திருவெண்காடு அருகே புதுத்துறை ஊராட்சியில் கோட்டகம் கிராமம் உள்ளது. இந்த பகுதியில் சீர்காழி-பூம்புகார் சாலையில் பயணிகள் நிழலகம் ஒன்று உள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பயணிகள் நிழலகத்தை இப்பகுதி சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சீர்காழி மற்றும் திருவெண்காடு பகுதிக்கு ெசல்ல பஸ்சுக்காக காத்திருக்கும் பொழுது பயன்படுத்தி வருகின்றனர்.

இருக்கைகள் உடைந்துள்ளன

மழை, வெயில் காலங்களில் பொதுமக்களுக்கு உதவிகரமாக இருந்த இந்த நிழலகம் தற்போது சேதமடைந்து காணப்படுகிறது.

மேலும் கட்டிடத்தில் அமரும் இடங்களில் உள்ள சிமெண்டு இருக்கைகள் உடைந்து உள்ளது.

சீரமைக்க வேண்டும்

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் மெயின் சாலையில் இந்த நிழலகம் அமைந்துள்ளதால் பஸ்சுக்கு செல்லும் பயணிகளுக்கு மிகவும் உபயோகரமாக இருக்கிறது. தற்போது இந்த நிழலகம் சேதமடைந்து காணப்படுகிறது. சிமெண்டு இருக்கைகள் உடைந்துள்ளதால் முதியவர்கள் மற்றும் மாணவர்கள் அமர முடியாத நிலை உள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பயணிகள் நிழலகத்தை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளோம் என்றார்.


Next Story