கன்னியாகுடி கிராமத்தில் சேதமடைந்த ரேஷன் கடை சீரமைக்கப்படுமா?
கன்னியாகுடி கிராமத்தில் சேதமடைந்த ரேஷன் கடை சீரமைக்கப்படுமா?
கன்னியாகுடி கிராமத்தில் சேதமடைந்த ரேஷன் கடையை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேதமடைந்த ரேஷன் கடை
சீர்காழி அருகே கன்னியாகுடி கிராமத்தில் ரேஷன் கடை உள்ளது. இந்த கடை மூலம் கன்னியாகுடி கிராமத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக இந்த ரேஷன் கடை கட்டிடம் பராமரிப்பு இன்றி சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் கட்டிடத்தின் மேற்பகுதியில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து கீழே விழுந்த வண்ணம் உள்ளன. இதன் காரணமாக மழைக்காலங்களில் ரேஷன் கடைக்குள் வைக்கப்பட்டுள்ள அரிசி, சீனி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் நனைந்து வீணாகி வருகிறது. இந்த பொருட்களை மீண்டும் மக்களுக்கு வினியோகம் செய்ய வேண்டிய நிலை இருந்து வருகிறது.
சீரமைத்து தர வேண்டும்
எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சேதமடைந்த ரேஷன் கடையை சீரமைத்து தர வேண்டும். இல்லையெனில் இந்த கட்டிடத்தை அப்புறப்படுத்திவிட்டு அதே இடத்தில் புதிய ரேஷன் கடை கட்டித்தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.