சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?


சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?
x
தினத்தந்தி 10 March 2023 12:15 AM IST (Updated: 10 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருமக்கோட்டையில் சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

திருவாரூர்

திருமக்கோட்டை:

திருமக்கோட்டையில் சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

சேதமடைந்த சாலை

திருமக்கோட்டை கடைவீதியில் இருந்து நல்லான்பிள்ளை தெருவிற்கு செல்லும் குறுக்கு சாலை உள்ளது. இவ்வழியாக மேலநத்தம், ஆவிக்கோட்டை, பெருமாள்கோவில்நத்தம், மின் உற்பத்தி நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டும். இந்த சாலை வழியாக தினமும் பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றனர். பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகள் சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்று வருகின்றனர்.

தற்போது இந்த சாலை சேதமடைந்து காணப்படுகிறது. சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலையில் சைக்கிளில் செல்லும் மாணவ-மாணவிகள், பள்ளங்களால் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.

விபத்து

மழை காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் வருபவர்கள் பள்ளத்தில் மழைநீர் தேங்கி உள்ளது தெரியாமல் கீழே விழுந்து விபத்துகளில் சிக்குகின்றனர். இந்த சாலை சேதமடைந்தால் வாகன ஓட்டிகள் 2 கிலோ மீட்டர் தூரம் சுற்றி சென்று வருகின்றனர். சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிப்பட்டு வருகின்றனர்.

சீரமைக்க வேண்டும்

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.


Next Story