ஆபத்தான மின்கம்பம் மாற்றப்படுமா?
ஆபத்தான மின்கம்பம் மாற்றப்படுமா?
நாகப்பட்டினம்
நாகூர்:
நாகூரில் வண்ணாகுளம் மேல்கரை பகுதி உள்ளது. இங்கு 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். வண்ணாகுளம் மேல்கரை சாலை ஓரத்தில் உள்ள மின்கம்பம் சேதமடைந்துள்ளது. மேலும் சிமெண்டு காரைகள் பெயர்ந்து எந்தநேரத்திலும் விழும் நிலையில் ஆபத்தான உள்ளது. மின்கம்பத்தின் அடிபகுதியில் இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாகூர் வண்ணாகுளம் மேல்கரையில் ஆபத்தான மின்கம்பத்தை மாற்றி, புதிய மின்கம்பம் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story