ஆபத்தான ரேஷன் கடை கட்டிடம் அகற்றப்படுமா?


ஆபத்தான ரேஷன் கடை கட்டிடம் அகற்றப்படுமா?
x

கீழ சட்டநாதபுரத்தில் ஆபத்தான ரேஷன் கடை கட்டிடம் அகற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

மயிலாடுதுறை

திருவெண்காடு:

கீழ சட்டநாதபுரத்தில் ஆபத்தான ரேஷன் கடை கட்டிடம் அகற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

பழுதடைந்த ரேஷன் கடை கட்டிடம்

திருவெண்காடு அருகே கீழ சட்டநாதபுரத்தில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்த கடை கட்டிடம் தற்போது பழுதடைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டித் தர ேவண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில் கீழ சட்டநாதபுரத்தில் உள்ள ரேஷன் கடை மூலம் 670 குடும்ப அட்டையினர் பயன் அடைந்து வருகின்றனர்.

ஆபத்தான நிலையில் உள்ளது

இந்த கடையின் மூலம் கீழ சட்டநாதபுரம், அக்ரஹாரம், மேலத்தெரு, கீழத்தெரு மற்றும் முக்கா வட்டம் ஆகிய பகுதி மக்கள் அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

இந்த ரேஷன் கடை கடந்த 1 ஆண்டுக்கும் மேலாக பழுதடைந்து காணப்படுகிறது.

கட்டிடத்தில விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. கட்டிடத்தின் மேற்கூரையில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. மழைக்காலங்களில் கட்டிடத்திற்குள் தண்ணீர் கசிவதால் மேற்கூரையில் தார்பாய்கள் மூலம் மூடப்பட்டுள்ளது.

அகற்ற வேண்டும்

பலத்த மழை பெய்தால் கட்டிடத்திற்குள் தண்ணீர் கசிந்து அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த ரேஷன் கடை கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்டிடத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறோம் என்றனர்.


Next Story