பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ் இயக்கப்படுமா?


பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ் இயக்கப்படுமா?
x
தினத்தந்தி 5 Sept 2023 12:15 AM IST (Updated: 5 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வடபாதிமங்கலத்தில் இருந்து மன்னார்குடிக்கு பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ் இயக்கப்படுமா? என்று மாணவர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

வடபாதிமங்கலத்தில் இருந்து மன்னார்குடிக்கு பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ் இயக்கப்படுமா? என்று மாணவர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

மாணவர்கள்

கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம் பகுதியில் இருந்து, வடபாதிமங்கலம், உச்சுவாடி, சோலாட்சி, மாயனூர், பூசங்குடி, புனவாசல், கிளியனூர், எள்ளுக்கொல்லை தெரு, பழையனூர், நாகங்குடி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பள்ளி மாணவர்கள் கூத்தாநல்லூர் மற்றும் மன்னார்குடி போன்ற ஊர்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், வடபாதிமங்கலத்தில் இருந்து மன்னார்குடிக்கு காலை நேரத்தில் செல்லக்கூடிய அரசு மற்றும் தனியார் பஸ்கள் காலை 7.45 மணியோடு நின்று விடுகிறது. அதன்பிறகு, காலை 9.10 மணிக்கு ஒரு அரசு பஸ் இயக்கப்படுகிறது.

கூடுதல் பஸ்வசதி

இத்தகைய நேரங்களில் இயக்கப்படும் பஸ்கள் மூலம் மாணவர்கள் பள்ளிகளுக்கு உரிய நேரத்தில் செல்லமுடியாமல் போகிறது. இதனால், வடபாதிமங்கலத்தில் காலை 8 மணிக்கு புறப்பட்டு, மன்னார்குடி சென்றடையும் வகையில் கூடுதலாக அரசு பஸ்கள் இயக்க வேண்டும். இதைப்போல மாலை நேரத்தில், மாலை 5 மணிக்கு புறப்பட்டு வடபாதிமங்கலம் சென்று அடையும் வகையில் கூடுதலாக அரசு பஸ்கள் இயக்க வேண்டும் என்று வடபாதிமங்கலம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பள்ளி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story