பழுதடைந்த மின்மோட்டாரை சீரமைத்து குடிநீர் வழங்கப்படுமா?


பழுதடைந்த மின்மோட்டாரை சீரமைத்து குடிநீர் வழங்கப்படுமா?
x

கூத்தாநல்லூர் அருகே தொட்டியில் தண்ணீர் ஏற்ற அமைக்கப்பட்ட மின்மோட்டாரை சீரமைத்து குடிநீர் வழங்கப்படுமா? என அந்த பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் அருகே தொட்டியில் தண்ணீர் ஏற்ற அமைக்கப்பட்ட மின்மோட்டாரை சீரமைத்து குடிநீர் வழங்கப்படுமா? என அந்த பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

குடிநீர் தொட்டி

கூத்தாநல்லூர் அருகே குலமாணிக்கம் பகுதியில் உள்ளது அன்னுக்குடி கிராமம். இந்த கிராமத்தின் மக்கள் பயன்பாட்டிற்காக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது.

மேலும், அந்த தொட்டியில் தண்ணீர் ஏற்றுவதற்காக அதன் பக்கத்திலேயே குழாய்கள் பதிக்கப்பட்டு, மின் மோட்டார் அமைக்கப்பட்டது. இந்த தொட்டியின் மூலம் அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

மின்மோட்டார் பழுது

இந்த நிலையில் மின்மோட்டார் மற்றும் மின் சாதனங்கள் பழுதடைந்ததால் கடந்த சில ஆண்டுகளாக தொட்டியில் குடிநீர் ஏற்ற முடியவில்லை.

இதனால் அந்த பகுதி மக்களுக்கு குடிநீருக்கான சிரமப்படுகின்றனர். அருகில் உள்ள பகுதிகளுக்கு சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர்.

சீரமைக்க வேண்டும்

இதுகுறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த மின்சாதனங்களை சீரமைத்து தொட்டியில் குடிநீர் ஏற்றி வினியோகம் செய்ய வேண்டும் என அந்த பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Next Story