பழனி-பெருமாள் புதூர் இடையே அரசு பஸ் இயக்கப்படுமா?


பழனி-பெருமாள் புதூர் இடையே அரசு பஸ் இயக்கப்படுமா?
x
தினத்தந்தி 23 Dec 2022 12:30 AM IST (Updated: 23 Dec 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

பழனி-பெருமாள் புதூர் இடையே அரசு பஸ் இயக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல்

நெய்க்காரப்பட்டி அருகே உள்ள பெருமாள்புதூர் கிராமத்துக்கு பழனியில் இருந்து தனியார் பஸ் இயக்கப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பஸ் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் பெருமாள்புதூர் பகுதி மக்கள், விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். நெய்க்காரப்பட்டி வரை நடந்து வந்து பின்னர் அவர்கள் அங்கிருந்து பஸ் மூலம் பழனிக்கு சென்று வருகின்றனர்.

எனவே பெருமாள்புதூர் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில், பழனி-பெருமாள்புதூர் இடையே அரசு பஸ் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அரசு பஸ் எப்போது இயக்கப்படும் என்று, வழிமேல் விழி வைத்து அப்பகுதி மக்கள் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story