காட்சி பொருளாக உள்ள உயர்கோபுர மின்விளக்கு ஒளிருமா?


காட்சி பொருளாக உள்ள உயர்கோபுர மின்விளக்கு ஒளிருமா?
x
தினத்தந்தி 24 May 2023 12:15 AM IST (Updated: 24 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருமருகலில் காட்சி பொருளாக உள்ள உயர்கோபுர மின்விளக்கு ஒளிருமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகலில் காட்சி பொருளாக உள்ள உயர்கோபுர மின்விளக்கு ஒளிருமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

உயர்கோபுர மின்விளக்கு

நாகூர்-நன்னிலம் சாலையில் திருமருகல் சந்தைப்பேட்டை கடைதெரு சாலை உள்ளது. இந்த சாலை வழியாக திட்டச்சேரி, திருமருகல், சியாத்தமங்கை, கட்டுமாவடி, பண்டாரவடை, திருப்புகலூர், ஏனங்குடி, இடையாத்தங்குடி, சேஷமுலை, ஏர்வாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அன்றாடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வட்டார வேளாண்மை அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், கடைத்தெரு, வங்கி உள்ளிட்டவைகளுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் சந்தைப்பேட்டை சாலையை இணைக்கும் இடத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. 3 சாலைகள் இணைக்கும் இடத்தில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு கடந்த சில மாதங்களாக பழுதடைந்து செயல்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துகளில் சிக்கி கொள்கின்றனர்.

நடவடிக்கை

இந்த உயர் கோபுர மின் விளக்கை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து காட்சிப்பொருளாக உள்ள உயர் கோபுர மின் விளக்கை ஒளிர செய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Next Story