விளக்குடி- ராயநல்லூரை இணைக்கும் சிமெண்டு பாலம் புதிதாக கட்டப்படுமா?


விளக்குடி- ராயநல்லூரை இணைக்கும் சிமெண்டு  பாலம் புதிதாக கட்டப்படுமா?
x

விளக்குடி- ராயநல்லூரை இணைக்கும் சிமெண்டு பாலம் புதிதாக கட்டப்படுமா?

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி அருகே விளக்குடி-ராயநல்லூரை இணைக்கும் சிமெண்டு பாலத்தை புதிதாக கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கைப்பிடிகள் உடைந்த பாலம்

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள விளக்குடி-ராயநல்லூரை இணைக்கும் சிமெண்டு பாலம் முள்ளிஆற்றின் குறுக்கே பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த பாலத்தை நாட்டுவாய்க்கால் தெரு, வேளாண்தெரு, கீழத்தெரு, பெரியகுல தெரு, பாப்பான்தெரு, சித்தன்தெரு, அய்யன்கட்டி தெரு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பல்வேறு இடங்களுக்கு செல்வதற்காக பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்த பாலத்தின் கைப்பிடிகள் உடைந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. மேலும் பாலம் சேதமடைந்து பலவீனமாக காணப்படுகிறது. இதனால் அந்தவழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் உயிர்சேதம் ஏற்படுமோ? என்ற அச்சத்துடன் உள்ளனர். மேலும் இரவு நேரங்களில் செல்பவர்கள் ஆற்றில் விழுந்து விடுவோமோ? என்ற பயத்துடன் செல்கின்றனா. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உயிர்சேதம் ஏற்படும் முன்பு சேதமடைந்த விளக்குடி-ராயநல்லூரை இணைக்கும் சிமெண்டு பாலத்தை இடித்துவிட்டு, அதே இடத்தில் புதிதாக கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிதாக பாலம் கட்டித்தர வேண்டும்

இதுகுறித்து அந்தபகுதியை சேர்ந்த ரவி கூறுகையில், இந்த பாலம் கட்டி பல வருடங்கள் ஆகிவிட்டன. தற்போது பாலத்தின் கைப்பிடிகள் உடைந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. சமூக விரோதிகள் அந்த பகுதிகளில் உள்ள தெருவிளக்கை உடைத்துவிட்டனர். இதனால் பாலத்தின் பகுதி இருள் சூழ்ந்துள்ளது. இரவு நேரங்களில் பாலத்தில் செல்பவர்கள் இருளில் ஆற்றில் விழுந்து விடுவோேமா? என்ற அச்சத்துடன் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த பாலத்தை இடித்துவிட்டு அதே இடத்தில் புதிதாக பாலம் கட்டித்தர வேண்டும் என்றார்.


Related Tags :
Next Story