ஆனந்த காவேரி கால்வாயில் கிடக்கும் பனை மரங்கள் அகற்றப்படுமா?


ஆனந்த காவேரி கால்வாயில் கிடக்கும் பனை மரங்கள் அகற்றப்படுமா?
x

ஆனந்த காவேரி கால்வாயில் கிடக்கும் பனை மரங்கள் அகற்றப்படுமா?

தஞ்சாவூர்

பூதலூரில் ஆனந்த காவேரி கால்வாயில் கிடக்கும் பனை மரங்களை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனந்த காவேரி கால்வாய்

பூதலூர் ஒன்றியத்தில் கச்சமங்கலம் தொடங்கி கள்ளப்பெரம்பூர் ஏரியில் முடியும் பாசன கால்வாய் ஆனந்த காவேரி கால்வாய். இந்த கால்வாயில் பூதலூர் ஆனந்த விநாயகர் கோவில் அருகில் பாலம் அமைந்துள்ளது. இந்த பாலம் திருக்காட்டுப்பள்ளி -செங்கிப்பட்டி சாலையை இணைக்கும் பாலமாக அமைந்துள்ளது. பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பாசனம் பெறும் ஆனந்த காவேரி கால்வாயில் பூதலூர் பாலத்தின் கீழ் நீரோட்டத்தை தடுக்கும் வகையில் 3 பனை மரங்கள் வேரோடு பிடுங்கி போடப்பட்டுள்ளது.

அகற்ற வேண்டும்

தண்ணிர் பாசனத்திற்கு சென்று கொண்டிருந்த போது இந்த பனை மரங்கள் வெளியில் தெரியாமல் இருந்தது. தற்போது தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கழிவு நீர் தேங்க கால்வாய் குறுக்கே கிடக்கும் பனை மரங்கள் காரணமாக உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாயின் குறுக்கே கிடக்கும் பனை மரங்களை மேட்டூர் அணை தண்ணீர் திறப்பதற்கு முன்பு அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.


Next Story