நாகூர்-நன்னிலம் சாலையில் அபாய பள்ளம் சீரமைக்கப்படுமா?
நாகூர்-நன்னிலம் சாலையில் அபாயம் பள்ளம் சீரமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.
திட்டச்சேரி:
நாகூர்-நன்னிலம் சாலையில் அபாயம் பள்ளம் சீரமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.
சாலை சீரமைப்பு
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் சியாத்தமங்கையில் வீடுகளுக்கு குழாய்கள் மூலம் கியாஸ் வழங்கும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் மெயின் சாலைகளில் பூமிக்கு அடியில் குழாய்களை புதைத்து உள்ளது.இந்த நிலையில் நாகூர் -நன்னிலம் சாலை கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக அமைக்கப்பட்டது.பின்னர் அந்த சாலையில் சேதம் அடைந்த பகுதிகள் மட்டும் சீரமைத்து பராமரிக்கப்பட்டது. .இந்த நிலையில் கடந்த ஆண்டு சுமார் ரூ.13 கோடி ஒப்பந்தம் அடிப்படையில் பனங்குடியில் இருந்து சன்னாநல்லூர் வரை சுமார் 20 கிலோ மீட்டர் சாலை புதுபிக்கும் பணிகள் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி கடந்த சில மாதங்களுக்கு முன்பு முடிக்கப்பட்டது.
அபாய பள்ளம்
புதிய சாலை அமைக்கப்பட்டு 6 மாதங்களை கூட கடக்காத நிலையில் திட்டச்சேரி-சியாத்தமங்கை இடையே சாலையில் 10-க் கும் மேற்பட்ட இடங்களில் தனியார் கியாஸ் நிறுவனம் மூலம் பள்ளங்கள் தோண்டப்பட்டு குழாய்களை சீரமைக்கும் பணிகளை செய்து வருகின்றனர். இவ்வாறு தோண்டப்படும் பள்ளங்கள் வாரக்கணக்கில் மூடப்படாமல் அபாய பள்ளத்தை சுற்றி இரும்பு தடுப்புகளை அமைத்து செல்கின்றனர்.
இதனால் இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்கள் செல்பவர்கள் இரும்பு தடுப்பு சாலையில் நடுவில் இருப்பது தெரியாமல் அடிக்கடி இரும்பு தடுப்பில் மோதி விபத்துக்குள்ளாகின்றனர்.மேலும் சாலையில் பெரிய வாகனங்கள் கடக்க முயற்சிக்கும் பொழுது விபத்துக்கள் ஏற்படுகிறது.
நடவடிக்கை
இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அபாய பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.