ஆபத்தான வளைவில் வேகத்தடை அமைக்கப்படுமா?
மேலநாகூர் அருகே வைரன்இருப்பு மெயின் சாலையில் ஆபத்தான வளைவில் வேகத்தடை அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனா்.
நாகூர்:
மேலநாகூர் அருகே வைரன்இருப்பு மெயின் சாலையில் ஆபத்தான வளைவில் வேகத்தடை அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனா்.
விபத்துகள்
நாகை மாவட்டம் மேலநாகூரைஅடுத்த வைரன் இருப்பில் முக்கிய சாலை உள்ளது. இந்த சாலை நாகூர் கிழக்கு சாலையில் இருந்து பாலக்காடு, பெருங்கடம்பனூர், ஆழியூர் வழியாக திருவாரூருக்கு செல்லும் முக்கிய சாலையாக உள்ளது. திருவாரூரில் இருந்து நாகூருக்கு இந்த சாலையில் அதிக அளவில் பொதுமக்கள் வாகனங்களில் சென்று வருகின்றனர். வைரன் இருப்பில் முக்கிய சாலையில் குளம், கோவில் அருகில் ஆபத்தான வளைவு ஒன்று உள்ளது. இந்த வளைவில் இருமுனையில் எதிரே வரும் வாகனமும் தெரியாமல் அதிக அளவில் விபத்துகள் ஏற்படுகிறது.
வேகத்தடை அமைக்க கோரிக்கை
இது முக்கிய சாலை என்பதால் வாகனங்கள் அதிக அளவில் வேகமாக வருகிறது. பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகள் அதிக அளவில் சைக்கிளில் மற்றும் நடந்து செல்லும்போது எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். இரவு நேரங்களில் அதிக அளவில் வாகனங்கள் வருவதால் வளைவுகள் தெரியாமல் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்குகிறார்கள்.இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே விபத்துகளை தவிர்க்க ஆபத்தான வளைவில் வேதத்தடை அமைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.