ஆபத்தான வளைவில் வேகத்தடை அமைக்கப்படுமா?


ஆபத்தான வளைவில் வேகத்தடை அமைக்கப்படுமா?
x

வடபாதிமங்கலத்தில் ஆபத்தான வளைவில் வேகத்தடை அமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனா்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்

வடபாதிமங்கலத்தில் ஆபத்தான வளைவில் வேகத்தடை அமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனா்.

நடைபாலம்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள, வடபாதிமங்கலத்தில், உச்சுவாடி இரட்டை தெருவுக்கு செல்லக்கூடிய பாலம் எதிரே சாலையில் ஆபத்தான வளைவு உள்ளது. இந்த ஆபத்தான சாலை வளைவையொட்டிய இடத்தில் நடைபாலம் உள்ளது. அந்த பாலத்தை கடந்து தான் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மற்றும் அங்கன்வாடி குழந்தைகள் பள்ளிகளுக்கு சென்று வர முடியும். வடபாதிமங்கலம் அருணாச்சலேஸ்வரர் கோவில் மற்றும் அப்பகுதியில் உள்ள வழிபாட்டு தலங்கள், கடைவீதி, பஸ்நிலையம் மற்றும் ஏனைய இடங்களுக்கு அப்பகுதி மக்கள் சென்று வர இந்த பாலத்தை பயன்படுத்துகிறாா்கள்.

வேகத்தடை

மேலும், இந்த சாலையில் அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி கல்லூரி வாகனங்கள், கார், வேன், ஆட்டோ மற்றும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில், வடபாதிமங்கலம் சாலையில் உள்ள ஆபத்தான வளைவில் எதிர் எதிரே வரும் வாகனங்கள் எளிதில் தெரிவதில்லை. இதனால், அடிக்கடி அந்த ஆபத்தான வளைவில் வாகன விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே சாலையை கடந்து சென்று வருவதற்கும், வாகனங்களை ஓட்டிச் செல்வதற்கும் மிகவும் சிரமமாக உள்ளது. இதனால் ஆபத்தான வளைவில் 2 பக்கமும் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story