ரூ.2 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்


ரூ.2 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்
x

கும்பகோணம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தஞ்சாவூர்

கும்பகோணம்;

கும்பகோணம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மதுபாட்டில்கள்

கும்பகோணம் அருகே உள்ள, மணஞ்சேரி பகுதியில் வெளி மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து பதுக்கி வைத்து, விற்பனை செய்து வருவதாகக் கும்பகோணம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் கும்பகோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சிவசெந்தில்குமார் தலைமையிலான போலீசார், மணஞ்சேரி அக்ரஹாரம் பகுதியில் உள்ள ஒருவரது வீட்டில் சோதனையிட்டனர்.

பறிமுதல்

சோதனையில் அங்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான வெளிமாநில மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த மது பாட்டில்களை பதுக்கி வைத்தது யார்? இதன் பின்னணியில் யார் உள்ளனர் என விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story