அழகிய தேவி அம்பாள் கோவிலில் மது எடுப்பு செவ்வாய் திருவிழா


அழகிய தேவி அம்பாள் கோவிலில் மது எடுப்பு செவ்வாய் திருவிழா
x

திருமயம் அருகே 5 ஆண்டுகளுக்கு பிறகு அழகிய தேவி அம்பாள் கோவிலில் மது எடுப்பு செவ்வாய் திருவிழா நடைபெற்றது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

புதுக்கோட்டை

அழகிய தேவி அம்பாள் கோவில்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே லெம்பலக்குடியில் அழகிய தேவி அம்பாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் 5 ஆண்டுகளுக்கு பிறகு மது எடுப்பு செவ்வாய் திருவிழா கடந்த 19-ந்் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதைதொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்று வந்தது. மேலும் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதிஉலா வந்து பக்த ர்களுக்கு அருள்பாலித்தார்.

மதுகுடம் ஊர்வலம்

விழாவின் 9-ம் நாளான நேற்று மதுஎடுப்பு செவ்வாய் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் மது எடுப்பதற்கு 12 ேபரை ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி தேர்ந்தெடுப்பார்கள். அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 11 பெண்களும், ஒரு ஆணும் கடந்த 10 நாட்களாக விரதம் இருந்து வந்தனர்.

பின்னர் அவர்கள் 12 பேரும் அழகிய தேவி அம்பாள் கோவிலிலிருந்து மது குடத்தை தலையில் சுமந்து கொண்டு செண்டை மேளம் முழங்க சந்திக்கருப்பர் கோவில் வரை ஊா்வலமாக சென்றனர். பின்னர் அங்கு கிடா வெட்டு பூஜை நடைபெற்றது.

பொங்கல் வைத்து...

அதனை தொடர்ந்து மீண்டும் மது குடத்தை தலையில் சுமந்தவாறு அழகிய தேவி அம்பாள் கோவிலை வந்தடைந்தனர். மது குடம் கோவிலில் இறக்கி வைக்கப்பட்ட பிறகு அம்பாள் வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து கிராம மக்கள் தங்களது வீடுகளில் பொங்கல் வைத்து, கிடாவெட்டி பூஜை நடத்தி அம்பாளை வழிபட்டனர்.

மது எடுப்பு திருவிழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story