மதுவிற்ற பெண் உள்பட 3 பேர் கைது


மதுவிற்ற பெண் உள்பட 3 பேர் கைது
x

திருவையாறு அருகே மதுவிற்ற பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டர்.

தஞ்சாவூர்

திருைவாறு;

திருவையாறு அருகே கண்டியூர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் காமராஜ் (வயது43). இவர் கண்டியூர் சுற்று குளம் அருகே மது விற்றுக்கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்ேபரில் சம்பவ இடத்துக்கு சென்ற திருவையாறு போலீசார்காமராஜை கைது செய்து அவர் வைத்திருந்து 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். கண்டியூர் குளத்துமேட்டுத்தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மனைவி சாந்தி (60). இவர் வீட்டின் அருகே மதுபாட்டில்களை வைத்து விற்றுக்கொண்டிருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் திருவையாறு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சாந்தியை கைது செய்து அவர் வைத்திருந்த 6 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.கண்டியூர் காளியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவா் தமிழ்மணி (56) இவர் வீட்டின் பின்புறம் அருகே மதுபாட்டில்களை விற்றுக்கொண்டிருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற திருவையாறு போலீசார் தமிழ்மணியை கைது செய்து அவர் வைத்திருந்த 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.


Next Story