கர்நாடக முதல் மந்திரி விரைவில் குணம் அடைய விருப்பம்: மு.க ஸ்டாலின் டுவிட்


கர்நாடக முதல் மந்திரி விரைவில் குணம் அடைய விருப்பம்: மு.க ஸ்டாலின் டுவிட்
x

கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை,

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை விரைந்து குணமடைய விரும்புவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னதாக, கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை தனது டுவிட்டர் பதிவின் மூலம் தனக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது எனவும், அதனால் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.இந்த பதிவை டேக் செய்து முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின், கர்நாடக முதல் மந்திரி குணம் அடைய விரும்புவதாக பதிவிட்டுள்ளார்.


Next Story