எடப்பாடி பழனிசாமி உடன் பாஜக தலைவர் அண்ணாமலை சந்திப்பு
எடப்பாடி பழனிசாமி உடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி உள்ளிட்டோரும் சந்தித்து பேசினார்.
சென்னை,
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அவைத்தலைவராக தமிழ் மகன் உசேன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய அனைத்து தீர்மானங்களும் நிராகரிப்பு என்றும் அடுத்த பொதுக்குழு ஜூலை 11-ந்தேதி கூடும் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் ஒற்றை தலைமை வேண்டும் என்ற முழக்கம் மேலாங்கி இருந்தது.
இந்த நிலையில், அடுத்தடுத்த பரபரப்பான சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக தலைவர் அண்ணாமலை அண்ணாமலை சந்தித்து பேசியுள்ளார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு சென்ற தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசியுள்ளார். அவருடன் பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி உள்ளிட்ட நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.
ஜனாதிபதி தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் நிரெளபதி முர்முவுக்கு ஆதரவு கோரி இந்த சந்திப்பு நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.