சப்-இன்ஸ்பெக்டர்களுடன் போலீஸ் சூப்பிரண்டு கலந்துரையாடல்


சப்-இன்ஸ்பெக்டர்களுடன் போலீஸ் சூப்பிரண்டு கலந்துரையாடல்
x

புதிதாக பணியில் சோ்ந்துள்ள சப்-இன்ஸ்பெக்டர்களுடன் போலீஸ் சூப்பிரண்டு கலந்துரையாடினார்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் புதிதாக பணியில் சேர்ந்துள்ள 23 சப்-இன்ஸ்பெக்டர்களுடன், நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் கலந்துரையாடல் நடத்தினார்.

அப்போது அவர் பேசுகையில், "புதிய சப்-இன்ஸ்பெக்டர்கள் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்ற வழக்குகளை முறையாக விசாரிக்க அனைத்து சட்டங்களையும் நன்றாக தெரிந்து இருக்க வேண்டும். அனைத்து சட்டங்கள் சம்பந்தமான அறிவினை வளர்த்துக் கொள்ள வேண்டும். போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்க வரும் மனுதாரர்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். கைது நடவடிக்கை மேற்கொள்ளும்போது கடைபிடிக்க வேண்டிய சட்ட விதிமுறைகள் குறித்தும், போலீஸ் நிலைய ஆவணங்களை பராமரிப்பது குறித்தும், போலீஸ் நிலைய பணிகளை சட்டப்படி மேற்கொள்ள வேண்டும்" என்றார்.

சப்-இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்ற ஒரு மாதத்தில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் திருட்டு வழக்கில் ஈடுபட்டவர்களை கைது செய்ததற்காகவும், சொத்துக்களை விரைந்து மீட்டதற்காகவும், குற்றப்பத்திரிக்கை விரைவாக தாக்கல் செய்து சிறப்பாக பணிபுரிந்தமைக்காகவும் அவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கினார். இவர்களுக்கு ஸ்மார்ட் காவலர் செயலி பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.


Next Story