ஊஞ்சலூரில் திருமணமான 3 மாதத்தில் தூக்குப்போட்டு என்ஜினீயர் தற்கொலை


ஊஞ்சலூரில் திருமணமான 3 மாதத்தில்  தூக்குப்போட்டு என்ஜினீயர் தற்கொலை
x

என்ஜினீயர் தற்கொலை

ஈரோடு

ஊஞ்சலூரில் திருமணமான 3 மாதத்தில் தூக்குப்போட்டு என்ஜினீயர் தற்கொலை செய்துகொண்டார்.

என்ஜினீயர்

ஊஞ்சலூர் குட்டிமணியகாரனூரை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் சங்கர் (வயது 32). என்ஜினீயர். சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேைல பார்த்து வந்தார். இவருக்கும் திருச்சியை சேர்ந்த பிரியதர்ஷினி (27) என்பவருக்கும் கடந்த 3 மாதத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக திருச்சி சென்ற பிரியதர்ஷினி அதன்பின்னர் கணவர் வீட்டுக்கு வர மறுத்துவிட்டார். இதனால் சங்கர் வாழ்க்கையில் வெறுப்படைந்த நிலையில் காணப்பட்டார். மேலும் கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்தே வேலை பார்த்து வந்தார்.

தூக்கில் தொங்கினார்...

இந்தநிலையில் செல்வராஜூம், அவருடைய மனைவியும் வெளியூர் சென்றிருந்தார்கள். நேற்று மதியம் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, சங்கர் அறையில் உள்ள மின்விசிறி கொக்கியில் சேலையால் தூக்குப்போட்டு பிணமாக தொங்கிக்கொண்டு இருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதறி துடித்தார்கள்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் கொடுமுடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு


Next Story