திருச்செந்தூரில் அனுமதியின்றிஆர்ப்பாட்டம் நடத்திய பா.ஜ.க.வினர் 92 பேர் கைது
திருச்செந்தூரில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ஜ.க.வினர் 92 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி
திருச்செந்தூர்:
பொங்கல் பரிசு தொகுப்பில் தேங்காய் வழங்க வலியுறுத்தி பா.ஜ.க.விவசாய அணி சார்பில் திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத்தலைவர் சங்கரகுமார் அய்யன் தலைமை தாங்கினார். இதில் பா.ஜ.க.மாவட்ட பொதுச்செயலாளர் சிவமுருகன் ஆதித்தன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொணடனர். போலீசார் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதால், 21 பெண்கள் உள்பட 92 பா.ஜ.கவினரை இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story