தமிழ் தேசிய பேரியக்க தலைவர் மணியரசன் உள்பட 50 பேர் கைது
‘தமிழ்நாட்டு வேலை தமிழர்களுக்கே’ என வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் தேசிய பேரியக்க தலைவர் மணியரசன் உள்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
வல்லம், மார்ச்.16-
'தமிழ்நாட்டு வேலை தமிழர்களுக்கே' என வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் தேசிய பேரியக்க தலைவர் மணியரசன் உள்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆர்ப்பாட்டம்
தஞ்சை அருகே உள்ள செங்கிப்பட்டியில் நேற்று மாலை தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 'தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே', மற்ற மாநிலங்களை போல் மண்ணின் மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை என சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.ஒன்றிய செயலாளர் தென்னவன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை என தெரிகிறது.
50 பேர் கைது
இதைத்தொடர்ந்து போலீசார் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் தேசிய பேரியக்க தலைவர் மணியரசன், மாவட்ட செயலாளர் வைகறை, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 50 பேரை கைது செய்தனர்.பின்னர் அவர்களை வேனில் ஏற்றி செங்கிப்பட்டியில் உள்ள திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்றனர்.