மொபட்டில் சென்று சாராயம் விற்ற பெண் கைது


மொபட்டில் சென்று சாராயம் விற்ற பெண் கைது
x

மொபட்டில் சென்று சாராயம் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

சேலம்

தலைவாசல்,

தலைவாசல் அருகே வடகுமரை மேட்டு தெருவில் வசித்து வருபவர் ராஜேஸ்வரி (வயது 39). இவரது தனது வீட்டின் அருகே உள்ள பகுதிகளுக்கு மொபட்டில் சென்று பாக்கெட் சாராயம் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தலைவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு மொபட்டில் சாராயம் விற்ற ராஜேஸ்வரியை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயம் மற்றும் மொபட் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story